ஆர்னோல்டின் பதவி விலகலுக்கான காரணத்தை வெளியிட்டார் சுமந்திரன்

Report Print Suthanthiran Suthanthiran in இலங்கை
524Shares

யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயர் வேட்பாளராக இம்மானுவேல் ஆர்னோல்ட்டை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பிரேரித்துள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி சபைகளின் தலைமை பதவிகள் யார் யாருக்கு வழங்கப்படும் என்பதை தற்போது அறிவிப்பதில்லை என்று தீர்மானித்து இருந்த போதும் இந்த விடயத்தில் அவர் மாகாண சபை உறுப்பினராக இருந்த காரணத்தினால் அதிலிருந்து அவர் தகுந்த நேரத்துக்கு ராஜினாமா செய்யவேண்டிய தேவை இருந்த காரணத்தினாலேயே அவரை மேயர் பதவிக்கு பிரேரித்து மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்திருக்கின்றார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாநகர மேயர் வேட்பாளராகதான் இம்மானுவேல் ஆர்னோல்ட் போட்டியிடுவார் என அவர் மேலும்தெரிவித்தார்.