கூட்டமைப்பின் யாழ். மாநகர மேயர் வேட்பாளராக ஆர்னோல்ட் போட்டியிடவில்லை

Report Print Dias Dias in இலங்கை
302Shares

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாநகர மேயர் வேட்பாளராக இம்மானுவேல் ஆர்னோல்ட் போட்டியிடவுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என இலங்கை தமிழரசு கட்சி அறிவித்துள்ளது.

இது குறித்து அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் இன்று விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறும் வட்டாரங்களின் வேட்பாளர்களின் இணக்கப்பாட்டின் அடிப்படையில், மேயர் வேட்பாளரை நியமனம் செய்வது என்று, பங்காளிக் கட்சிகளிடையேயான கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தலில் வெற்றி பெற்றதும், மேயர் மற்றும் துணை மேயர் ஆகியோர் நியமிக்கப்படவுள்ளனர்.

கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் சார்பிலோ, வேட்பாளர்களின் சார்பிலோ, உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டு, தேவையற்ற சர்ச்சைகளுக்கு இடமளிக் வேண்டாம்.’ எனவும் அந்த அறிக்கையில் துரைராசசிங்கம் கேட்டுக் கொண்டுள்ளார்.