ஆடு, மாடு, கோழி­களை வளர்க்க அனு­ம­தி­யில்லை!!

Report Print Dias Dias in இலங்கை

பளை–முல்­லைப்­பூங்கா குடி­யேற்­றக் கிரா­மத்­தில் கோழி மற்­றும் கால்­ந­டை­களை வளர்ப்­ப­துக்கு அனு­மதி மறுக்­கப்பட்­டுள்­ள­து.

இதனால் மக்­கள் தமக்­கான வாழ்­வா­தா­ரத்தை ஈட்­டிக் கொள்ள முடி­யா­மல் திண்­டாடி வரு­கின்­ற­னர். அத்­து­டன் குடி­யி­ருப்­பா­ளர்­கள் மீது பல்­வேறு கெடு­பி­டி­கள் பிர­யோ­கிக்­கப்­ப­டு­கின்றன என்று சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

கிளி­நொச்சி மாவட்­டத்­தின் பளை–பச்­சி­லைப்­பள்ளி பிர­தேச செய­லா­ளர் பிரி­வுக்கு உட்­பட்­டது முகா­வில் கிரா­மம். இந்­தக் கிரா­மத்­தின் மல்­வில் என்ற பகு­தி­ யில் 2013ஆம் ஆண்டு தனி­யார் ஒரு­வ­ரி­னால் முல்­லைப்­பூங்கா என்ற பெய­ ரில் சிறிய கிரா­மம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது.

இங்கு, மிக­வும் வறு­மைக்கு கோட்­டுக்கு உட்­பட்ட குடும்­பங்­கள் மற்­றும் பெண் தலை­மைத்­து­வக் குடும்­பங்­க­ ளுக்கு வீடு­கள் அமைத்­துக் கொடுக்­கப்­பட்­டுள்­ளன. கிளி­நொச்சி, யாழ்ப்­பா­ணம் போன்ற பகு­தி­க­ளில் இருந்­து­வந்த சுமார் 60 குடும்­பங்­கள் வரை இங்கு குடி­ய­மர்த்­தப்­பட்­டன.

இது­தொ­டர்­பாக கிராம மக்­கள் தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது:

இங்கு சில­ருக்கு குடி­யி­ருப்பு பகு­தி­யி­லேயே வேலை­கள் வழங்­கப்­பட்­டன. பலர் வெளி­யி­டங்­க­ளில் சென்­றும் வேலை செய்து வரு­கின்­ற­னர்.