யாழில் சில பகுதிகளில் பூனைக் கடிக்கு இலக்காகும் மக்கள்

Report Print Dias Dias in இலங்கை

தென்மராட்சிப் பிரதேசத்தில் பூனைகளால் கடியுண்ட நிலையில் சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது என சாவகச்சேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.

அவர்கள் பூனைகளுக்கு உணவு வைக்கும்போதும், அவற்றுடன் விளையாடும்போதும் கடிகாயங்களுக்கு உள்ளாகின்­ற­ன எனக் கூறி சிகிச்சை பெற வருகின்றனர்.

கட்டாக்காலி நாய்களால் கடிபடுவோரின் எண்ணிக்கை குறைவடைந்த நிலையில் பூனைகளால் கடியுண்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என மேலும் தெரிவிக்கப்பட்டது.