2000 மெற்றிக் தொன் உரம்! இலங்கைக்கு வருகிறது

Report Print Dias Dias in இலங்கை

2000 மெற்றிக் தொன் உரம் அடங்கிய கப்பல் ஒன்று நாளை மறுதினம் திங்கட்கிழமை இலங்கைக்கு வருகை தரவுள்ளது என்று அறியமுடிகிறது.

உரத்தட்டுப்பாடு ஏற்படாத வகையில் விவசாயிகளுக்கு உரம் வழங்குவதற்காக அந்த உரம் இறக்குமதி செய்யப்படவுள்ளது. எந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

அதேவேளை சிறுபோகத்துக்குத் தேவையான அளவு உரம் களஞ்சியப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.