இந்திய ஊடகவியலாளரை வியப்பில் ஆழ்த்திய இலங்கை!

Report Print Thayalan Thayalan in இலங்கை
இந்திய ஊடகவியலாளரை வியப்பில் ஆழ்த்திய இலங்கை!

இலங்கையில் போர்க் காலத்திலும் அதற்குப் பின்னரான காலப் பகுதியிலும் நிலவிய பதற்றகரமான சூழல் எங்ஙனம் மாற்றமடைந்து விட்டன என்பதை வியப்பபுடன் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார் இந்திய ஊடகவியலாளர் ஆர். கே. ராதாகிருஷ்ணன்.

இலங்கையில் போர் முடிவிற்கு கொண்டு வரப்பட்ட பின்னர் 2009ம் ஆண்டு முதல் சுமார் 3 வருடகாலப் பகுதி இந்தியாவின் ஹிந்து ஆங்கிலப் பத்திரிகையின் கொழும்பு செய்தியாளாராக இருந்தவர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன்.

தமிழக அரசியல் தொடர்பான தொலைக்காட்சி விவாதங்களில் முக்கிய விவாதியாக பல தொலைக்காட்சிகளில் தோன்றிப் பேசி வரும் ஆர்.கே. தற்போது சிறிய விடுமுறையில் இலங்கை வந்துள்ளார்.

இன்றைய தினம் சுதந்திர சதுக்கத்தில் உடற்பயிற்சிக்காக சென்ற போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பாதுகாப்பு வீரர்கள் சகிதம் அங்கே நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்ததை எதிரே கண்ணுற்றுள்ளார்.

அப்போது எந்த பாதுகாப்பு நெருக்குவாரங்களும் பதற்றமும் இல்லாமல் ஜனாதிபதியும் அவரது பாதுகாப்பு தரப்பினரும் இருந்ததைப் பார்த்ததாகவும் மிகவும் சந்தோசமாக அவர்கள் இருந்ததாகவும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த போது இந்த நாட்டில் வழமை நிலை திரும்பி விட்டதாக காண்பிக்க முனைந்ததாகவும் ஆனால் அவரைக் அக்காலத்தில் இவ்வாறு கண்ணுற்ற போது பாதுகாப்பு தரப்பினர் மிகவும் பதற்றத்துடன் இருந்ததையும் நினைவுபடுத்தியுள்ளார்.

இவ்வாறு நிலைமைகள் இலங்கையில் எங்ஙனம் மாறி விட்டன என தனது டுவிட்டர் பதிவில் ஆர்.கே. குறிப்பிட்டுள்ளார்.