யாழில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது கத்தி வெட்டு!

Report Print Thayalan Thayalan in இலங்கை
104Shares

பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை அவரது கணவர் கத்தியால் வெட்டியுள்ளார்.

26 வயதுடய பெண் பொலிஸ் உத்தியோகத்தர் கடமைக்குச் சென்று திரும்பும் வழியிலேயே, யாழ்.மீசாலை புத்தூர்ச் சந்தி ஏ-9 வீதியில் வைத்து கத்தியால் வெட்டப்பட்டுள்ளார்.

குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் தற்போது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.