மைத்திரிக்கு எதிராக ஊழல் மோசடி குற்றச்சாட்டு??

Report Print Dias Dias in இலங்கை

லஞ்ச ஊழல் மற்றும் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட உள்ளதாக நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது.

நாளைய தினம் ஜனாதிபதிக்கு எதிராக இந்த முறைப்பாடு செய்யப்பட உள்ளது.

மத்திய வங்கியின் ஆளுனராக வெளிநாட்டுப் பிரஜை ஒருவரை நியமித்தமை மற்றும் மஹாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அந்த அமைச்சுக்களில் இடம்பெறும் ஊழல் மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இந்த முறைப்பாடு செய்யப்பட உள்ளது.

மஹாவலி அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனுராத ஜயரட்ன மற்றும் சுற்றாடல் அதிகாரசபையின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட சிலருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட உள்ளது.