சீனர்களை முந்தி இலங்கைக்குள் படையெடுக்கும் இந்தியர்கள்

Report Print Dias Dias in இலங்கை
349Shares

இலங்கைக்கான இந்தியத் துணைத்தூதுவராக பணியாற்றிவரும் அரிந்தம் பக்ஸி தனது டுவிட்டர் தளத்தில், இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரியுடன் ஒப்பிடும் போது 2018ஆம் ஆண்டு ஜனவரியில் 40 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த வருடம் ஜனவரி மாத்தில் 31,173 ஆக காணப்பட்ட சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை இவ்வருடம் ஜனவரி மாதத்தில் 43,643 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

இலங்கைக்கான மிக முக்கியமான சுற்றுலா மூலமாக இந்தியா இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் சீனாவின் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 22 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

சீனாவில் இருந்து இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் 24,819 சுற்றுலாப் பயணிகளே இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

கடந்தாண்டு ஜனவரியிலும் பார்க்க இலங்கைக்கான ஒட்டுமொத்த சுற்றுலாப்பயணிகளின் வருகை 12.6 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.

இதன்படி இவ்வருடம் ஜனவரியில் 246,972 சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

கடந்த 2017ஆம் ஆண்டில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை முதன்முறையாக இரண்டு மில்லியன் தொகையைத் தாண்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது