மஹிந்த ராஜபக்சவின் வெற்றியானது சீனாவின் வெற்றி - நிலாந்தன்

Report Print Thayalan Thayalan in இலங்கை

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழ் வாக்குகள் சிதறடிக்கப்பட்டமை தமிழ் மக்களுக்கு நல்லது அல்ல என அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியம் பேசும் கட்சிகள் விட்ட தவறே தென்னிலங்கை கட்சிகளை நோக்கி மக்கள் செல்ல காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் தொடர்பில் யாழ்ப்பாணத்திலுள்ள அவரது இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அத்துடன் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வெற்றியானது சீனாவின் வெற்றி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சிப் பீடம் ஏறும் பட்சத்தில் தமிழ் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லையெனவும் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்துள்ளார்.