மட்டு ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையில் தவிசாளர் பதவி தமிழனுக்கே!

Report Print Dias Dias in இலங்கை

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தமிழ் கட்சிகளுடன் இணைந்தே ஆட்சி அமைக்கும் தவிசாளர் பதவி தமிழனுக்கே பங்காளிக் கட்சிக்கு உப தவிசாளர் பதவி வழங்கப்படும் இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை என இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் என்.விஷ்ணுகாந்தன் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு கொம்மாதுறை அலுவலகத்தில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.