2009ம் ஆண்டு போர் நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­பட்­ட இலங்­கை­ இராணுவ அதிகாரியை இடைநிறுத்தியது ஐ.நா

Report Print Thayalan Thayalan in இலங்கை

லெப­னா­னில் ஐ.நா. அமை­திப்­படை நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­ப­டுத்­தப்­ப­ட­வி­ருந்த லெப்.கேணல் ஹேவகே என்ற இரா­ணுவ உயர் அதி­கா­ரியை ஐ.நா. தடுத்து நிறுத்­தி­யுள்­ளது.

2009ஆம் ஆண்டு இறு­திப் போரின் போது மனித உரிமை மீறல்­க­ளில் ஈடு­பட்­டார் என்று இவர் மீது குற்­றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது என்று, அது தொடர்­பில் விசா­ரணை இடம்­பெ­று­கின்­றது என்­றும், அத­னா­லேயே அவர் ஐ.நாவால் தடுத்து நிறுத்­தப்­பட்­டுள்­ளார் என்­றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

ஐ.நா. அமை­திப்­படை நட­வ­டிக்­கை­க­ளில் பங்­கேற்க லெப­னா­னுக்கு அனுப்­பப்­ப­ட­வி­ருந்த இரா­ணு­வத்­தின் 150 பேர் கொண்ட அணிக்கு லெப்.கேணல் ரத்­ன­புலி வசந்­த­கு­மார ஹேவகே என்ற அதி­காரி பொறுப்­பாக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தார்.

இவர் 2008ஆம் 2009ஆம் ஆண்டு காலப்­ப­கு­தி­யில் போர் நட­வ­டிக்­கை­க­ளில் தீவி­ர­மாக ஈடு­பட்­டி­ருந்­த­வர் என்­றும், இவர் தொடர்­பான மனித உரிமை ஆய்­வு­கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை என்­றும் மனித உரிமை ஆர்­வ­லர்­கள் கரி­சனை எழுப்­பி­யி­ருந்­த­னர்.

இந்த நிலை­யில், இவரை லெப­னா­னில் ஐ.நா அமை­திப்­படை நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­ப­டுத்­து­வதை ஐ.நா தடுத்­துள்­ளது. இது குறித்து இன்­னர் சிற்றி பிரஸ் ஊட­கத்­துக்கு கருத்து வெளி­யிட்­டுள்ள ஐ.நா. பொதுச்­செ­ய­ல­ரின் பிரதி பேச்­சா­ளர் பர்­ஹான் ஹக், லெப­னா­னில் ஐ.நா. இடைக்­கா­லப் படை­யில் நிறுத்­தத் திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்த இரா­ணுவ அதி­காரி, மீளாய்வு முடி­யும் வரை அங்கு அனுப்­பப்­ப­டு­வது இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ளது.

முழு­மை­யான மீளாய்­வுக்­குப் பின்­னரே, அவரை அங்கு நிறுத்­து­வதா என்­பது குறித்து முடிவு செய்­யப்­ப­டும். இந்த இரா­ணுவ அதி­கா­ரி­யின் பின்­னணி தொடர்­பாக நாம் இலங்­கை­யின் வதி­வி­டப் பிர­தி­நி­தி­யு­டன் தொடர்பு கொண்­டி­ருக்­கி­றோம்.

அவர்­கள் எமது விசா­ர­ணை­க­ளுக்கு முழு­மை­யாக ஒத்­து­ழைக்­கி­றார்­கள். மனித உரிமை மீறல்­கள் பற்­றிய அறிக்­கை­களை ஐ.நா. மிகத் தீவி­ர­மாக எடுத்­துக் கொள்­ளும்.

கொள்­கை­க­ளின் அடிப்­ப­டை­யில், ஐ.நா. உடன் பணி­யாற்­றும் அனைத்து பணி­யா­ளர்­க­ளும் உயர்ந்த செயல்­தி­றன், திறமை, நேர்மை ஆகி­ய­வற்­றை­யும், மனித உரி­மை­க­ளுக்கு மதிப்­ப­ளிப்­ப­வர்­க­ளா­க­வும், அர்ப்­ப­ணிப்­புள்­ள­வர்­க­ளா­க­வும் இருப்­பதை உறு­தி­ப­டுத்த வேண்­டி­யது எமது கடப்­பா­டா­கும் – என்­றார்.