பிரித்தானியாவில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை பாரிய வீழ்ச்சி.

Report Print Thayalan Thayalan in இலங்கை

பிரித்தானியாவில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை கடந்த செப்டம்பர் மாதம் 29 ஆயிரத்தினால் குறைவடைந்து 2 லட்சத்து 44 ஆயிரமாக கணக்கிடப்பட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் பின்னர் தேசிய புள்ளிவிபரவியல் அலுவலகம் வெளியிடும் இரண்டாவது அறிக்கை இதுவாகும்.

ஒரு லட்சத்துக்கும் கீழாக நிகர இட ஒதுக்கீட்டை குறைக்கும் அரசாங்கத்தின் இலக்கிலும் இந்த எண்ணிக்கை அதிகமாகும்.

ஒரு வருடத்துக்கும் மேலாக பிரித்தானியாவில் குடியேறும் மக்கள் மற்றும் பிரித்தானியாவிலிருந்து வெளியேறும் மக்கள் தொகையில் வித்தியாசம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய புள்ளிவிபரவியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவல்களின் பிரகாரம், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து பிரித்தானியாவில் குடியேறும் மக்களின் நிகர தொகை கடந்த செப்டெம்பர் வரையான ஒரு வருடத்தில் 90 ஆயிரமாக கணக்கிடப்பட்டுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டின் பின்னர் ஒரு லட்சத்துக்கும் குறைவான நிகர தொகை கணக்கெடுப்பை காட்டுவது இதுவே முதன்முறையாகும்.

பிரித்தானியாவுக்குள் நுழைவதற்கோ அல்லது வெளியேறுவதற்கோ மக்கள் எடுக்கும் தீர்மானத்திற்கு பிரெக்சிற்றும் ஒரு காரணியாக இருக்கலாம் என்பது சர்வதேச குடியேற்ற புள்ளிவிபர அதிகாரிகளின் கருத்தாக அமைந்துள்ளது.

Latest Offers