அரசாங்கத்திற்கு சவால் விடும் மஹிந்த அணி: நடுவீதியில் ஊர்வலம்

Report Print Thayalan Thayalan in இலங்கை
அரசாங்கத்திற்கு சவால் விடும் மஹிந்த அணி: நடுவீதியில் ஊர்வலம்
147Shares

மஹிந்த ஆதரவு பொது எதிரணியின் மே தின ஊர்வலம் காலியில் இன்று நடைபெற்றது.

காலி சமனல மைதானத்தை நோக்கி, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் மஹிந்த அணியினரின் மே தின ஊர்வலம் இடம்பெற்றது.

இதன்போது, அரசாங்கத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு, நடு வீதியில் பெருமளவானோர் திரண்டு இந்த ஊர்வலத்தை நடத்தியுள்ளனர்.

குறிப்பாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க திருடன் என்றும், அரசாங்கத்தை கவிழ்த்து மீண்டும் ஆட்சிபீடமேறுவோம் என்றும், செயற்றிறன் மிக்க ஆட்சியே அவசியம் என்றும், அதனை மஹிந்த தலைமையில் ஏற்படுத்துவோம் என்றும் நாமல் ராஜபக்ஷ கோஷமெழுப்ப, அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து கோஷமெழுப்பினர்.

ஊர்வலமாகச் சென்றவர்கள், காலி சமனல விளையாட்டரங்கை அடைந்துள்ள நிலையில் அங்கு மே தினக் கூட்டம் நடைபெற்று வருகின்றது.

குறித்த ஊர்வலமானது நாமலின் முகப்புத்தகத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. தொழிலாளர் உரிமைகளை வலியுறுத்தும் மே தினம் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளதென, முகப்புத்தகத்தில் பலர் விமர்சனங்களையும் முன்வைத்துள்ளனர்.