எலிசபெத் மகாராணியிடம் விருது பெறும் இலங்கைப்பெண்

Report Print Dias Dias in இலங்கை

எலிசபெத் மகாராணியிடம் இருந்து விருது பெற இலங்கைப் பெண்ணான பாக்கியா விஜயவர்த்தன தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

பக்கிங்ஹாம் மாளிகையில் எலிசபெத் மகாராணியிடம் இருந்து “மகாராணியின் இளம் தலைவர்” விருதை இவர் பெற்றுக் கொள்ளவுள்ளார்.

இவ் விருது வழங்கும் நிகழ்வு இம்மாதம் 26ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

சமூகத்தில், நாட்டில் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட இளம் தலைமுறையினருக்கு “மகாராணி இளம் தலைவர் விருது” வழங்கப்பட்டுவருகிறது.

அந்த வகையில் இவ்விருதுக்கு சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த 29 வயதான பாக்கியா தெரிவாகியுள்ளார்.

உணவுப் பாதுகாப்பை மக்களிடையே ஊக்குவித்தமைக்காக இவ்விருது பாக்கியாவுக்கு வழங்கப்படுகிறது.

பாக்கியா வீட்டில் வீட்டுத் தோட்டத்தில் இருந்து உணவுப் பொருட்கள், காய்கறி, பழவகைகளை உற்பத்தி செய்யுமாறு பொதுமக்களை தூண்டி வந்துள்ளார்.

ஆயிரக் கணக்கான போட்டியாளர்களிடையே இலங்கையைச் சேர்ந்த பாக்கியா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.