இலங்கைக்கான அஞ்சல் சேவைகளை இடைநிறுத்தியது நாடு

Report Print Thayalan Thayalan in இலங்கை
இலங்கைக்கான அஞ்சல் சேவைகளை இடைநிறுத்தியது நாடு

இலங்கையில் தொடரும் அஞ்சல் ஊழியர்களின் போராட்டம் காரணமாக, இலங்கைக்கான அஞ்சல் சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக ஓமான் அஞ்சல் சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.

அஞ்சல் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள இணைய அறிக்கையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அஞ்சல் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினால் இலங்கையில் நிலவும் சூழ்நிலை காரணமாக, இலங்கைக்கான அஞ்சல்களை ஏற்பதை நிறுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல்வரை இலங்கைக்கான அஞ்சல்களை பொறுப்பேற்க வேண்டாம் என இலங்கை அஞ்சல் திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட மின்னஞ்சல் அறிவிப்பை தொடர்ந்தே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஓமான் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.