குழந்தையைப் பறிகொடுத்த தாய், இரண்டு நாள்களின் பின் உயிரிழப்பு

Report Print Thayalan Thayalan in இலங்கை
183Shares

குழந்தை இறந்து இரண்டு தினங்களில் தாயும் இறந்த சம்பவம் கிண்ணியா, மதீனா நகர் பிரதேசத்தில் நடந்துள்ளது.

35 வயதான ராபிக் மாயிலா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனது குழந் தையின் பிரசவத்துக்கு சில தினங்களே இருந்த நிலையில் திடீரென காய்ச்சலால் பீடிக்கப்பட்டு, கிண்ணியா தள வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கடந்த வாரம் மாற்றப்பட்டார்.

குழந்தை வயிற்றுக்குள் இருக்கும் போது இறந்ததால், அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை வெளியே எடுக்கப்பட்டது.

இதன் பிறகு, தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி தாயும் நேற்றுஉயிரிழந்துள்ளார்,