வடக்கில் பொது­மக்­களின் காணி­களை விடு­விக்கும் இரா­ணுவ தள­ப­தியின் முடிவு முட்­டாள்­த­ன­மா­னது.

Report Print Thayalan Thayalan in இலங்கை
வடக்கில் பொது­மக்­களின் காணி­களை விடு­விக்கும் இரா­ணுவ தள­ப­தியின் முடிவு முட்­டாள்­த­ன­மா­னது.

வடக்கில் பொது­மக்­களின் காணி­களை மீள ஒப்­ப­டைப்­ப­தற்­காக இரா­ணுவ முகாம்­களை மூடி, முகாம்­களின் அளவைச் சுருக்கும் இரா­ணுவ தள­ப­தியின் முடிவு முட்­டாள்­த­ன­மா­னது என்று அமைச்­சரும் முன்னாள் இரா­ணுவ தள­ப­தி­யு­மான பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா தெரி­வித்­துள்ளார்.

ஆங்­கில நாளிதழ் ஒன்­றுக்கு அவர் அளித்­துள்ள செவ்­வியிலேயே இதனைத் தெரி­வித்­துள்ளார்.

அச் செவ்வி கேள்வி – பதில் வடிவில் பின்வருமாறு:

கேள்வி: வடக்கில் விடு­தலைப் புலிகள் மீள் எழுச்சி கொள்­வ­தற்­கான வாய்ப்பு தொடர்­பாக பேசப்­ப­டு­கி­றது. விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான போரை வெற்றி கொள்­வ­தற்கு இரா­ணு­வத்­துக்கு தலைமை தாங்­கிய தள­பதி என்ற வகையில் உங்­களின் மதிப்­பீடு என்ன?

பதில்: நாங்கள் விடு­தலைப் புலி­களை அழித்து விட்டோம். அமைதி மற்றும் நல்­லி­ணக்­கத்­துக்­கான பின்­ன­ணி­யையும் அந்தப் பிர­தே­சத்தை அபி­வி­ருத்தி செய்­வ­தற்­கு­மான சூழலை உரு­வாக்­கி­யி­ருக்­கிறோம். அது போது­மா­ன­தல்ல.

சில தமிழ் அர­சி­யல்­வா­திகள், இன்­னமும் பிரி­வி­னை­வாதம் பேச முயன்று கொண்­டி­ருக்­கி­றார்கள். அதனை அனு­ம­திக்க முடி­யாது. தெற்­கி­லுள்ள சிங்­கள மக்கள் அதற்கு இணங்­க­மாட்­டார்கள்.

அதி­காரப் பகிர்வை செய்ய வேண்­டு­மானால் நாம் பொது­ வாக்­கெ­டுப்­புக்கு செல்ல வேண்டும். பெரும்­பான்­மை­யான மக்கள் அதனை எதிர்க்­கி­றார்கள்.

தமிழ் மக்கள் பொரு­ளா­தார அபி­வி­ருத்­தியில் ஆர்வம் கொண்­டி­ருக்­கி­றார்­களே தவிர அர­சி­யலில் அல்ல. மக்கள் எதனைக் கேட்­கி­றார்கள் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

மக்­களின் தேவை­களை நிறை­வேற்ற வேண்­டுமே தவிர, அர­சி­யல்­வா­தி­களின் தேவை­களை அல்ல. சில தமிழ் அர­சி­யல்­வா­திகள் வடக்கிலுள்ள இரா­ணுவ முகாம்­களை அகற்ற வேண்டும் என்­கி­றார்கள். எந்த அடிப்­ப­டை­யிலும் அவர்­களின் அந்த அழுத்­தங்­க­ளுக்கு விட்­டுக்­கொ­டுக்க முடி­யாது. நாட்டிலிருந்து இரா­ணு­வத்தை உங்­களால் அகற்ற முடி­யாது.

கேள்வி: இரா­ணு­வத்தின் பரு­மனைக் குறைக்க வேண்­டிய தேவையுள்­ளதா?

பதில்: நாட்டின் எல்லா இடங்­க­ளிலும் இரா­ணு­வத்­தி­னரின் பிர­சன்னம் இருக்க வேண்­டிய தேவையுள்­ளது. இரா­ணுவம் தெற்கில் தான் இருக்க வேண்டும். வடக் கில் இருக்கக் கூடாது என்று உங்­களால் கூற­மு­டி­யாது. இரா­ணு­வத்தின் பரு­மனைக் குறைக்க வேண்­டிய தேவை இல்லை என்­பதே எனது கருத்து.

எனது தனிப்­பட்ட கருத்­தின்­படி, இரா­ணு­வத்தின் குறைந்­த­பட்ச பலம் 1,50,000 இற்கு மேல் இருக்க வேண்டும். உள்­நாட்டுப் பிரச்­சி­னைக்­காக மாத்­தி­ர­மல்ல. வெளி­நாட்டு அச்­சு­றுத்தல் உள்­ளிட்ட எந்­த­வொரு நிலை­மை­யையும் எதிர்­கொள்­வ­தற்கும் நாட்டின் இரா­ணுவம் தயா­ராக இருக்க வேண்டும்.

சிங்­கப்பூர் ஒரு சிறிய நாடு. அவர்கள் 3 மில்­லியன் பேரைக் கொண்ட இரா­ணுவப் படையை வைத்­தி­ருக்­கி­றார்கள். ஒவ்­வொரு குடி­ம­கனுக்கும் போரி­டு­வ­தற்­கான பயிற்சி அளிக்­கப்­ப­டு­கி­றது. எனினும் அவர்கள் அணி­தி­ரட்­டப்­ப­ட­வில்லை.

வடக்கில் சில பகு­தி­களிலிருந்து இரா­ணு­வத்­தி­னரை முழு­மை­யாக வெளி­யேற்றக் கூடாது.

பொது­மக்­களின் காணி­களை திரும்ப அவர்­க­ளிடம் ஒப்­ப­டைப்­ப­தற்­காக சில இரா­ணுவ முகாம்­களை மூடி, இரா­ணு­வத்­தினர் வச­முள்ள காணி­களின் அளவைக் குறைப்­பது பற்றி இரா­ணுவ தள­பதி பெரு­மை­யாகப் பேசி­யதைக் கேள்­விப்­பட்டேன். இது முட்­டாள்­த­ன­மா­னது.

ஒவ்­வொரு அங்­குல நிலத்­தையும் மக்­க­ளுக்கு மீள வழங்­கு­வ­தற்­காக முகாம்­களை மூடு­வ­தை­யிட்டு பெரு­மைப்­பட முடி­யாது. நாங்கள் ஆய்வு செய்ய வேண்டும். மக்­களின் கருத்தைக் கேட்க வேண்டும். சரி­யான மதிப்­பீட்டை செய்ய வேண்டும்.

கேள்வி: இரா­ணுவம் கைப்­பற்­றி­யுள்ள காணிகள் விடு­விக்­கப்­படும் விட­யத்­துடன் நீங்கள் இணங்­க­வில்­லையா?

பதில்: அர­சியல் அழுத்­தங்­க­ளுக்­காக இதனைச் செய்யக் கூடாது. இதனை முறைப்­படி செய்ய வேண்டும்.

இரா­ணுவ தள­பதி இப்­போது இரா­ணு­வத்­தி­னரை விலக்கி அர­சி­யல்­வா­தி­களைத் திருப்­திப்­ப­டுத்த முனை­கிறார். அவர் முகாம்­களை மூடி வரு­வது குறித்து கள­முனைத் தள­ப­திகள் சிலர் மகிழ்ச்­சி­ய­டை­ய­வில்லை என்று கேள்­விப்­ப­டு­கிறேன். அது ஒரு பிரச்­சினையே.

கேள்வி: ஆயுதப் படை­களின் பிர­தம தள­ப­தி­யான ஜனா­தி­ப­தியின் உத்­த­ர­வு­களை இரா­ணுவ தள­பதி நிறை­வேற்ற வேண்­டி­ய­தில்­லையா?

பதில்: எல்லாச் சந்­தர்ப்­பங்­க­ளிலும் தமது மேல­தி­கா­ரி­களை இரா­ணுவ தள­பதி திருப்­திப்­ப­டுத்த வேண்­டி­ய­தில்லை. நாட்டின் பாது­காப்­புக்கு இரா­ணுவ தள­ப­தியே பொறுப்பு.

கேள்வி: பாது­காப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனா­தி­ப­தியை அவர் புறக்­க­ணிக்க அல்­லது இணங்­காமலிருக்க முடி­யுமா?

பதில்: இரா­ணு­வத்தை நிறுத்­து­வது பற்­றிய அறிவு அர­சி­யல்­வா­தி­க­ளுக்கில்லை. அவர் கள் அதனை விளங்கிக் கொள்­ள­வில்லை. நீண்ட காலத்­துக்கு முன்னர் 2002ஆம் ஆண்டு நான் யாழ்ப்­பாண தளபதியாக இருந்தபோது உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள சில பகுதிகளிலுள்ள முகாம்களை மூடுமாறு அரசாங்கத்தால் கேட்கப்பட்டேன். அப் போது நான் ஒரு மேஜர் ஜெனரல். பாது காப்பு நிலைமைகளைக் கருத்தில் கொண்டு அதனை நான் நிராகரித்தேன்.

கேள்வி: அந்த நேரத்தில் ஆட்சியில் இருந்த அரசாங்கத்துடன் தானே நீங்கள் இப்போது இருக்கிறீர்கள்?

பதில்: அது வேறுபட்ட சிந்தனை. இப்போது அவர்கள் எனது வழியில் பணியாற்றுவதை ஏற்றுக் கொண்டிருக் கிறார்கள்.