யாழில் ஜனாதிபதி மைத்திரியின் கூட்டத்தில் விஜ­ய­க­லாவிற்கு காத்திருந்த ஏமாற்றம்

Report Print Dias Dias in இலங்கை

அரச தலை­வ­ருக்­குப் பக்­கத்­தில் அம­ரச் சென்ற நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ் வ­ரனை, ஒதுக்­கி­விட்டு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை.சேனா­தி­ரா­சாவை தனக்கு பக்­கத்து ஆச­னத்­தில் அமர்த்­தி­னார் மைத்­தி­ரி­பால சிறி­சேன.

28 ஆண்­டு­க­ளின் பின்­னர் கடந்த ஆண்டு மயி­லிட்­டித்­து­றை­மு­கப் பிர­தே­சம் விடு­விக்­கப்­பட்­டது. போருக்கு முன்­னர் வரை­யில் கோலோச்­சிக் கொண்­டி­ருந்த மயி­லிட்­டித்­து­றை­மு­கத்தை மறு­சீ­ர­மைக்­கும் பணி­கள் நேற்று ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டது.

425 மில்­லி­யன் ரூபா செல­வில் இரண்டு கட்­டங்­க­ளாக இந்­தப் பணி­கள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யில் துறை­முக அபி­வி­ருத்­திப் பணிக்கு அடிக்­கல் நடும் நிகழ்வு நேற்று இடம்­பெற்­றது.

இந்த நிகழ்­வில் மீன்­பிடி அமைச்­சர் விஜித் விஜ­ய­முனி சொய்சா, இரா­ஜாங்க அமைச்­சர் திலீப் வெத­ஆ­ராச்சி, பிரதி அமைச்­சர்­க­ளான இ.அங்­க­ஜன், காதர் மஸ்­தான், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான மாவை.சோ.சேனா­தி­ராசா, ஈ.சர­வ­ண­ப­வன், த.சித்­தார்த்­தன், ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன், வடக்கு மாகா­ண­சபை அமைச்­சர் க.சிவ­நே­சன், வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான எம்.கே.சிவா­ஜி­லிங்­கம், இ.ஜெய­சே­க­ரன், யாழ்ப்­பா­ணம் மாந­கர முதல்­வர் இ.ஆனோல்ட், வலி.வடக்கு பிர­தேச சபைத் தவி­சா­ளர் சோ.சுகிர்­தன் ஆகி­யோர் கலந்து கொண்­ட­னர்.

அரச தலை­வ­ருக்கு எதி­ரா­கப் போராட்­டம் நடத்­தப்­ப­டும் என்று முன்­னர் அறி­விக்­கப்­பட்­டி­ருந்­த­தால் நேற்­றுக் கடும் பாது­காப்பு போடப்­பட்­டி­ருந்­தது.

சிவில் உடை­யில் பொலி­ஸார் கள­மி­றக்­கப்­பட்­டி­ருந்­த­னர். மயி­லிட்­டிக் கடற் பிர­தே­சத்­தில் கடற்­ப­டை­யி­னர் சுற்­று­கா­வல் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தி­ருந்­த­னர்.

முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச பங்­கேற்­கும் கூட்­டங்­க­ளுக்கு பேருந்­து­க­ளில் மக்­கள் அழைத்து வரப்­ப­டு­வது வழக்­கம். அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்­றுப் பங்­கேற்ற கூட்­டத்­துக்­கும் நூற்­றுக் கணக்­கான பேருந்­து­க­ளில் மக்­கள் ஏற்றி வரப்­பட்­ட­னர்.