கொழும்பிலிருந்து செல்லும் பிரதான வீதி திடீர் தாழிறக்கம்! மக்கள் அவதானம்..

Report Print Dias Dias in இலங்கை

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் வட்டவலை – குயில்வத்தை பகுதியில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதியினுடான போக்குவரத்து ஒருவழி போக்குவரத்தாக மட்டப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் காணப்பட்ட பலத்த மழையுடன் அந்த இடத்தில் சிறிய தாழிறக்கம் ஏற்பட்டிருந்த நிலையில், வீதி அபிவிருத்தி அதிகார சபையால் அது சீரமைக்கப்பட்டது.

எனினும் மீண்டும் அந்த இடத்தில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அப்பகுதியில் உள்ள மக்களை மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.