இலங்கையில் இன்றும் ஒரு பகுதியில் நில அதிர்வு?

Report Print Dias Dias in இலங்கை

பதுளை, ஹாலி-எல நகரத்தில் சில இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது என்று பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று மதியம் 12.30 மணியளவில் இந்த அதிர்வு உணரப்பட்டது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், அவ்வாறான நில அதிர்வு எதுவும் பதுளையில் பதிவாகவில்லை என்று புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப்பணியகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த வாரமும் திருகோணமலையின் சில பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக பிரதேச மக்களால் முதலில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதன் பின்னரே புவிச்சரிதவியல் திணைக்களம் அதை உறுதி செய்திருந்தது.

அதேபோல் இன்று பதுளையில் நில அதிர்வு ஏற்பட்டதாக பிரதேச மக்களால் தெரிவிக்கப்பட்டபோதும், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப்பணியகம் இந்த தகவலை மறுத்துள்ளது.

இவ்வாறு இலங்கையில் இடம்பெறுவதாக கூறப்படும் நிலநடுக்கத்திற்கான காரணம் என்ன என்று இதுவரை தகவல்கள் வெளிவரவில்லை. காலநிலை மாற்றமா? அல்லது தொடர் வெப்பத்தினால் ஏற்படும் அதிர்வா என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.