நாட்டின் பல பகுதிகளில் துப்பாக்கிச் சூடு, பலர் உயிரிழப்பு!

Report Print Thayalan Thayalan in இலங்கை

நாட்டின் இரு வேறு பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

தங்காலை, வாடிகல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை 11.15 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முகத்தினை மூடியவாறு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தங்காலை – கதிர்காமம் பிரதான வீதியின் வாடிகல பகுதியில் உள்ள மோட்டார் வாகன நிலைமொன்றின் உரிமையாளரான 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஹிக்கடுவையில் இன்று பிற்பகல் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹிக்கடுவை – தபால் அலுவலகத்திற்கு அருகில் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தநிலையில் குறித்த சம்பவங்கள் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Latest Offers