சிலாபம் பகுதியில் சீரற்ற காலநிலை! நிர்க்கதியான நிலையில் பலர்..

Report Print Dias Dias in இலங்கை

நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.

அந்த வகையில் நாட்டின் மேற்கு பகுதியல் தற்போது கடும் காற்றுடன் கூடிய காலநிலை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் சிலாபம், ஆணமடு மற்றும் ஆண்டிகம பகுதிகளை ஊடறுத்து வீசிய கடும் காற்றினால் பல வீடுகள் சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சீரற்ற காலநிலையினால் மக்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

கடும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதனால் பலரின் வீடுகள் சேதமாகி உள்ளதுடன் தொழில்களும் செய்ய முடியாத நிர்க்கதியான நிலையில் உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.