சிறிதரனிடம் நேரடியாக ஆதரவு கேட்ட ரணில்! கட்டியணைத்து சமரசப்படுத்திய சம்பந்தன்..

Report Print Samaran Samaran in இலங்கை

நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ச அரசு அமைக்கப்பட்ட விதத்திற்கு எதிராக இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டு விட்டன. இருந்தாலும், மஹிந்த ராஜபக்ச பதவி விலகவில்லை.

புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட விதத்திற்கு எதிராகவும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராகவும் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைகளில் 122 எம்.பிக்கள் ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

இந்த எண்ணிக்கையில் ஒன்றும் குறையக்கூடாது என்பதில் ஐ.தே.க கவனமாக இருக்கிறது.

கடைசியாக பாராளுமன்றம் கூடிய தினம், நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 121 வாக்குகள்தானே பதிவாகின, ஒன்று எங்கே போனது என யாராவது யோசிக்கலாம்.

அந்த ஒன்று சத்து சேனநாயக்கா அவர் நாடாளுமன்றத்திற்கு வர தாமதமாகி விட்டது அதனால் ஒரு வாக்கு குறைந்தது. ஆனால், மஹிந்தவிற்கு எதிரான 122 எம்.பிக்களும் அப்படியே இருக்கிறார்கள்.

மஹிந்த மீதான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த அந்த 122 வாக்குகளும், ஐ.தே.கவிற்கு ஆதரவான வாக்குகளாக மாறாது என்பதே இப்போது ஐ.தே.க, த.தே.கூட்டமைப்பிற்கு உள்ள சிக்கல்.

அது சி.சிறிதரன் எம்.பி வடிவில் வந்துள்ளது. சிறிதரன் மட்டுமே சிக்கலாக இருக்கிறார் என கூட்டமைப்பின் தலைமை ஏற்கனவே ஐ.தே.கவிடம் தெரிவித்து விட்டார்கள்.

மஹிந்த அரசிற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடக்கும் முயற்சி குறித்து ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

இதற்காக நாடாளுமன்றத்திற்குள், மஹிந்தவிற்கு எதிராக வாக்களித்தவர்களிடம் சத்தியக்கடதாசி வாங்கும் பணி நடந்தது.

கடைசியாக நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் சத்தியக்கடதாசிகளில் கையொப்பமிடப்பட்டது. இதன்போது சிறிதரன் எதிர்ப்பு தெரிவித்திருந்ததாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன.

அது தொடர்பான சில தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன. பாராளுமன்ற அமர்வு நடைபெற்றுக்கொன்டிருந்த போது சுமந்திரன் சபையில் வைத்து இரு தடவைகள் எதோ பேசினார் இதன்போது சிறீதரன் அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.

இதன் பின் பாராளுமன்றத்தில் வைத்து ரணில் விக்கிரமசிங்க, ரவி கருணாநாயகக் போன்ற ஐ.தே.கட்சியின் தலைவர்கள் சிறீதரன் எம்.பியின் அருகில் வந்து சிறீதரனின் கையை பிடித்து தமக்கு சத்சியக்கடதாசியில் கையெழுத்து வைத்து தரும்படி கேட்டிருக்கின்றார்கள்.

இதன் போது கடும் கோபமடைந்த சிறீதரன் கட்சி தலைவருடன் கதைத்துவிட்டு செய்கிறேன் என்று நாசூக்காக சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்.

பின் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் கூட்டத்தில் சம்பந்தன் சிறீதரன் இடையே கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றிருந்தது. இறுதியில் கட்சியின் ஒற்றுமைக்காக கையெழுத்து வைக்கிறேன் என்டு சத்தியக்கடதாசியில் கையெழுத்து வைத்தார்.

பின்னர் பாராளுமன்ற குழுக்கூட்டம் நிறைவடைந்த பின் சம்பந்தன் சிறீதரனை அழைத்து அரவணைத்து சமரசப்படுத்தி அனுப்பிவைத்திருக்கிறார்.

காலைக்கதிர்

Latest Offers