மாவட்டத்தில் முதல் நிலை பெற்ற, மிகவும் பின்தங்கிய பாடசாலை மாணவர்கள் மதிப்பளிப்பு

Report Print Yathu in இலங்கை

முல்லைத்தீவு - மாவட்டத்தில் 2018ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் முதலிடம் பெற்ற மாணவி, உள்ளிட்ட மு/மாமடு பழம்பாசி அ.த.கபாடசாலையின் மாணவர்கள் மதிப்பளிக்கப்பட்டுள்ளனர்.

இந் நிகழ்வானது 29.11.2018 அன்றைய நாள் பாடசாலை முதல்வரின் தலைமையில், பாடசாலையில் நடைபெற்றது

மேலும் இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் 195 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பெற்ற மாணவி செல்வி.இராசரூபன் - துச்சாதனா, புசுப்பநாதன் - துமிலன் (177புள்ளிகள்), முரளிதரன் - சன்சிகா (157புள்ளிகள்), இலங்கேசுவரன் அபிநயன் (155புள்ளிகள்) உள்ளிட்டவர்கள் மதிப்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது