புதுக்குடியிருப்பு பகுதியில் விடுதலைப் புலிகளின் ஒரு தொகை ஆயுதங்கள் மீட்பு

Report Print Dias Dias in இலங்கை

புதுக்குடியிருப்பு, சுதந்திபுரம் பிரதேசத்தில் யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படும் யுத்த உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் முல்லைத்தீவு முகாமின் அதிகாரிகளால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த உபகரணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது 2250 டி 56 ரக தோட்டாக்கள், ஆர்.பி.ஜி. தோட்டக்கள் 03, 06 ஆடி செல் உட்பட மேலும் பல அயுதங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்தநிலையில் கைப்பற்றப்பட்டுள்ள ஆயுதங்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதன் பின்னர் கிளிநொச்சி முகாமிலுள்ள தேடுதல் மற்றும் குண்டு செயலிழப்பு பிரிவினரின் ஒத்துழைப்புடன் அழிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் சுட்டிக்காட்டியுள்ளார்.