மஹிந்தவின் பதவி உட்பட அமைச்சரவை மீது பேரிடியாக மாறிய உத்தரவு

Report Print Dias Dias in இலங்கை

மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட அமைச்சரவைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று காலை இரண்டாவது தினமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில், குறித்த மனு பரிசீலிக்கப்பட்டது.

இன்று காலை விசாரணைக்கு வந்த வழக்கு தீர்ப்பிற்காக 3 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அந்தவகையில் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட அமைச்சரவைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

பிரதமர் பதவியை வகித்தவர் உட்பட அமைச்சரவையின் 49 உறுப்பினர்களையும் வரும் 12ம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறும் மேன் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த தீர்ப்பானது மஹிந்த உள்ளிட்ட அவர் சார்ந்த அனைவருக்கும் பேரிடியாக அமைந்துள்ளதாக அரசியல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.