இரணைமடு சுற்றுவட்டத்தில் டி.எஸ்.சேனாநாயக்கவின் நினைவுக் கல்

Report Print Suman Suman in இலங்கை

இரணைமடு குளத்தில் 1954ம் ஆண்டு நிறுவப்பட்ட நினைவு கல்லினை மீளவும் அதே இடத்தில் நிறுவுமாறு இரணைமடு நீர்பாசனத்திட்டத்தின் பொறியியலாளர் எஸ்.சுதாகரனுக்கு வடமாகாண ஆளுனர் பணித்துள்ளார்.

1954ம் ஆண்டு இரணைமடு புனரமைக்கப்பட்டதன் பின்னர் இலங்கையின் முதலாவது பிரதமர்

டி.எஸ்.சேனாநாயக்க மற்றும் டட்லி சேனாநாயக்க ஆகியோரின் பெயர் பதிக்கப்பட்ட நினைவுக்கல் நிறுவப்பட்டடிருந்தது.

இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணிகள் இடம்பெற்றிருந்த வேளை அதன் நிறைவுக்காக குளத்தின் சுற்றுவட்டம் அழகுபடுத்தும் பணிகள் இடம்பெற்றுவந்தன.

இந்த நிலையில் குறித்த நினைவுகல் அமைந்திருந்த பகுதியும் பக்குவமாக அகற்றப்பட்டு அந்த பகுதியில் சுற்றுவட்டம் ஒன்றும் அமைக்கப்பட்டது.

சுற்றுவட்டம் அமைந்திருந்த பகுதியில் குறித்த நினைவு கல்லையும்,புதிய நினைவு கல்லையும் அமைப்பதற்கான பணிகள் இடம்பெற்று வந்தன.

இந்நிலையில் அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வருகைக்கு முன்பதாக குறித்த நினைவுக்கல் அகற்றப்பட்டமை தொடர்பான செய்தி ஆளுனரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனையடுத்து விரைவாக நினைவு கல்லினை மீளவும் இருந்த இடத்தில் நிறுவுமாறு ஆளுநர் பணித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது குறித்த கல்லினை ஏற்கனவே அமைந்திருந்த பகுதியில் பொருத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவிக்கிக்கின்றது.

இதன் பணிகளை எதிர்வரும் புதன்கிழமை ஆளுநர் நேரடியாக விஜயம் செய்து பார்வையிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

குறித்த நினைவு கல் சுமார் 8 இஞ்சி அகலம் கொண்டதுடன், பாரிய கருங்கல் ஒன்றில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

Latest Offers

loading...