பரபரப்பான அரசியல் சூழலில் ஜனாதிபதி செயலகம் விரைந்தார் மஹிந்த

Report Print Dias Dias in இலங்கை

நாட்டில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில் சற்றுமுன்னர் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பிரதமர் பதவியில் இருந்து விலகுவார் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அவர் ஜனாதிபதி செயலகத்திற்கு விரைந்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.

அத்தோடு மஹிந்த மற்றும் அவரது அமைச்சர்கள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு தொடர்பான அனைத்து சமர்ப்பிப்புகளும் முடிவடைந்துள்ள நிலையில் தீர்ப்பும் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.