உற்பத்தி திறனில் கிளிநொச்சி மாவட்டச் செயலகம் முதலிடம்

Report Print Suman Suman in இலங்கை

கிளிநொச்சி மாவட்டச் செயலகம் உற்பத்தி திறனில் முதல் இடத்தைப் பெற்று சாதனை படைத்தது கிளிநொச்சி மாவட்ட செயலகம் 2016/2017 ம் ஆண்டிற்கான தேசிய உற்பத்தித் திறன் போட்டியில் கிளிநொச்சி மாவட்ட செயலகம் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது

உற்பத்தி திறன் செயலகத்தினால் இலங்கையிலுள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் உற்பத்தி திறன் செயற்பாடுகளை மதிப்பீடு செய்யும் நோக்கில் இரண்டு ஆண்டிற்கு ஒரு தடவை உற்பத்தி திறன் போட்டிகளை நடத்தி வருகின்றது. அந்தவகையில் இப் போட்டியில் இம்முறை கலந்து கொண்டு வடக்கு மானாணத்தில் முதல் முறையாக முதல் இடத்தைப் பெற்றுக் கொண்ட பெருமை கிளிநொச்சி மாவட்டத்திற்குரியது

அதற்கு முன்னர் 2016 ம் ஆண்டிற்கு உரிய உற்பத்தி திறன் போட்டியில் போட்டியில் முதன் முதலாக போட்டியிட்டு இரண்டாம் நிலையைப் பெற்றுக்கொண்டது குறிப்பிடத் தக்கது. இதுவரை நடைபெற்ற உற் உற்பத்தி திறன் போட்டியில் வடமாகாணத்தில் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்ட பெருமையை கிளிநொச்சியை மாவட்டம் கிளிநொச்சி மாவட்ட செயலகம் பெற்றுக் கொள்கிறது.