இன்று இடம் பெற்ற கோர விபத்து!! 16பேர் வைத்தியசாலையில் அனுமதி….

Report Print Dias Dias in இலங்கை

பொகவந்தலாவ பெற்றசோ தோட்டபகுதியில் வேன் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 16பேர் பொகவந்தலாவ பிரதேசவைத்தியசாலையில் அனுமதி பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று மாலை 03மணி அளவில் இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இரத்தினபுரி அப்புகஸ்தன பகுதியில் இருந்து அட்டன் பகுதியை நோக்கி பயணித்த குறித்த வேண் வண்டி பொகவந்தலாவ பலாங்கொட பிரதான வீதியின் பெற்றசோ பகுதியிலே விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் குறித்த வேன் வண்டியில் தடையாளி கோளாரு காரணமாகவே இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக காயமடைந்தவர்களுள் சிறுவர்கள் உட்பட் மொத்தம் 16பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்கட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இரத்தினபுரி பகுதியில் இருந்து அட்டன் பகுதிக்கு கிருஸ்த்துவ ஆலயம் ஒன்றிற்க்கு சென்ற வேன் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

காயமடைந்த 16பேரும் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் காயடைந்தவர்கள் குறித்து கவலை படவேண்டிய அவசிய இல்லை என பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஏஸ்.கே.ஜயசூரிய தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

Latest Offers