ஊவா மாகாண ஆளுநர் நியமனத்தில் மைத்திரியின் அடுத்த அதிரடி முடிவு

Report Print Dias Dias in இலங்கை

கஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நாயகம் கீர்த்தி தென்னகோன் ஊவா மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் ஆளுநராக பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

நாட்டில் கடந்த காலங்களில் ஊழல் மோசடிகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த கீர்த்தி தென்னகோன், தேர்தலை பிற்போடப்பட்டமை உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு எதிராக நீதிமன்றில் மனுக்களை தாக்கல் செய்து வந்தார்.

அத்தோடு, மனித உரிமை செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், அவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு, சப்ரகமுவ ஆளுநராக சிரேஷ்ட விரிவுரையாளர் தம்ம திஸாநாயக்க பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

Latest Offers