துப்பாக்கி இல்லாத சதிப்புரட்சி காரணமாக 1000 மில்லியன் டொலரை இழந்த இலங்கை

Report Print Thayalan Thayalan in இலங்கை
துப்பாக்கி இல்லாத சதிப்புரட்சி காரணமாக 1000 மில்லியன் டொலரை இழந்த இலங்கை

2019 ஆம் ஆண்டு முதல் இரண்டு வாரங்களில் இலங்கை மத்திய வங்கி மற்றும் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யப்பட்டிருந்த வெளிநாடு முதலீடுகள் வேகமாக திரும்பபெறப்பட்டுள்ளன.

2018 ஆம் ஆண்டில் இலங்கை பிணை முறி மற்றும் பங்குச் சந்தையில் இருந்து ஒரு பில்லியன் (1000 million) டொலர் வெளியேற்றபட்ட நிலையில், 2019 ஆம் 11 பில்லியன் ரூபாய் வெளியேற்றப்பட்டுள்ளது.

துப்பாக்கி இல்லாத சதிப்புரட்சி என சபாநாயகர் கூறிய அரசியலமைப்பு நெருக்கடியின் விளைவாக இலங்கையில் பிணை முறி மற்றும் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டிருந்த வெளிநாட்டு முதலீடுகள் திரும்பபெறப்பட்டன.

அரசியல் நெருக்கடி தீரக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த 12 மாதங்களில் அல்லது விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படலாம் என்ற அரசியல் நிச்சயமற்ற நிலைமை காணப்படுகிறது.

2018 ஆம் ஆண்டில் இலங்கை ரூபாய் மதிப்பிழக்க இந்த அரசியல் நிலைமைகள் பிரதான காரணங்களில் ஒன்றாக இருந்தது என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி 11 ஆம் திகதி இலங்கை பிணை முறி மற்றும் பங்குச் சந்தையில் இருந்து முதலீடுகள் வெளியேற்றபட்டுள்ளன. இலங்கை மூலதன சந்தையில் இருந்து முதலீடுகள் வெளியேற்றபடுவது தொடர்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.