இலங்கையர்களுக்கு கிடைக்கும் நன்மைகளில் பாதிப்பா? விசேட அறிவிப்பு

Report Print Ajith Ajith in இலங்கை

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகினாலும், ஜிஎஸ்பி பிளஸ் சலுகையின் அடிப்படையில் இலங்கையர்களுக்கு கிடைக்கும் நன்மைகளில் பாதிப்பு ஏற்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டௌரீஷ் இதனை தெரிவித்துள்ளார்.

தற்போது பிரித்தானியாவில், இலங்கையின் ஏற்றுமதியாளர்களுக்கு ஜிஎஸ்பி பிளஸ் திட்டத்தின் கீழ் பல்வேறு வரிச்சலுகைள் கிடைக்கின்றன.

இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகினால் இது பாதிக்கப்படும் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் அவ்வாறான அச்சம் தேவையில்லை என்று உயர்ஸ்தானிகர், தேசிய வர்த்தக சம்மேளன மாநாடு நேற்று கொழும்பில் இடம்பெற்ற வேளையில் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகிய பின்னர், பிரித்தானியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நாடுகளின் நன்மை கருதி, வர்த்தக முன்னிலை குழு ஒன்றை பிரித்தானிய அரசாங்கம் அமைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தக்குழு, அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் பாதிப்புக்களை குறைக்கும் திட்டங்களை முன்னெடுக்கும் என்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.