முல்லைத்தீவில் மைத்திரியின் பாதுகாப்புக்குச் சென்ற இராணுவ வாகனத்திற்கு நேர்ந்த கதி

Report Print Dias Dias in இலங்கை

முல்லைத்தீவு - தட்டாமலைப் பகுதியில் இன்று மதியம் இராணுவ வாகனமொன்று விபத்திற்கு உள்ளானதில் இருவர் பலியாகியுள்ளதுடன், நால்வர் காயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவுக்கு ஜனாதிபதி இன்று விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இந்த நிலையில் அவரது பாதுகாப்பிற்காக சென்ற இராணுவ கோமாண்டோ படையணி சென்ற வாகனம் தனது பாதுகாப்பு பணியை நிறைவு செய்து வவுனியா நோக்கி பயணித்த போது விபத்திற்கு இலக்காகியுள்ளது.

தட்டாலை பகுதியில் உள்ள வளைவில் வேகக்கட்டுப்பாட்டை இழந்தே வாகனம் விபத்திற்குள்ளாகியுள்ளதுடன், படுகாயமடைந்தவர்கள் உடனடியாக நோயாளர் காவு வண்டிகளில் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

எனினும் விபத்தில் காயமடைந்தவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.