யாழில் மீண்டுமொரு வித்தியாவா? சிறுமி பலாத்காராத்தில் சிக்கிய காம கொடூரர்களின் பின்னணி!

Report Print Dias Dias in இலங்கை

வீடு புகுந்து பணம் மற்­றும் நகை ­க­ளைக் கொள்­ளை­ய­டித்து பதின்ம வய­துச் சிறு­மியை பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு உட்­ப­டுத்­திய சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டைய சந்­தேக நபர்­களை 6 நாட்க­ளின் பின்­னர் காங்­கே­சன்­துறை குற்­றத்­த­டுப்­புப் பிரிவு பொலி­ஸார் கைதுசெய்­துள்­ள­னர்.

தெல்­லிப்­ப­ழை­யைச் சேர்ந்த மகா­தே­வன் ரூபன் (வயது-28), ஏழா­லை­யைச் சேர்ந்த இரா­ஐ­கோ­பால் கிருஷ்ணகு­மார் (வயது-30) ஆகி­யோர் உள்­ளிட்ட 4 பேர் சந்­தே­கத்­தில் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

மகா­தே­வன் ரூபன் மற்­றும் இரா­ஜ­கோ­பால் கிருஷ்ணகு­மார் இரு­வ­ரும் சிறு­மியை பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு உட்­ப­டுத்­திய சந்­தே­க­ந­பர்­கள் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

அவர்­கள் இரு­வ­ரும் ஒரு­வர் மீது ஒரு­வர் குற்­றச்­சாட்­டு­களை தமது விசா­ர­ணை­களை முன்­வைத்­துள்­ள­தா­கப் பொலி­ஸார் குறிப்­பிட்­ட­னர்.

வலி. வடக்கு பிர­தேச செய­லர் பிரி­வில் கடந்த 19ஆம் திகதி சனிக்­கி­ழமை இரண்டு இடங்­க­ளில் கொள்­ளைச் சம்­ப­வம் இடம்­பெற்­றது.

பணம் மற்­றும் நகை­களை கொள்­ளை­யர்­கள் கொள்­ளை­ய­டித்­துச் சென்­ற­னர். இதன்­போது வீட்­டி­லி­ருந்த பதின்ம வய­துச் சிறு­மியை பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு உட்­ப­டுத்­தி­யி­ருந்­த­னர். மருத்­துவ பரி­சோ­த­னை­க­ளில் இது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது.

காங்­கே­சன்­து­றைப் பிராந்­திய பொறுப்­ப­தி­காரி உடு­க­ம­சூ­ரி­ய­வின் பணிப்­பு­ரை­யின் கீழ் காங்­கே­சன்­துறை உதவி பொலிஸ் அத்­தி­யட்­சர் சுசி­ல­கு­மார தல­மை­யி­லான பொலிஸ் புல­னாய்­வுப் பிரி­வி­னர், காங்­கே­சன்­துறை குற்­றத்­த­டுப்பு பிரி­வி­ன­ரும் இணைந்து சந்­தே­க­ந­பர்­க­ளைத் தேடி வந்­த­னர்.

இள­வா­லை­யைச் சேர்ந்த இளை­ஞர் ஒரு­வரை பொலி­ஸார் கடந்த வியா­ழக்­கி­ழமை கைது செய்­த­னர். கொள்­ளைச் சம்­ப­வத்­துக்கு அவர் உடந்தை என்ற சந்­தே­கத்­தில் கைது செய்­த­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

வீடு­களை நோட்­டம்­விட்டு தக­வல்­களை அவரே வழங்­கு­ப­வர் என்று பொலி­ஸார் குறிப்­பிட்­ட­னர்.

அவ­ரி­டம் மேற்­கொண்ட விசா­ர­ணை­க­ளுக்கு அமை­வாக கட்­டு­வ­னைச் சேர்ந்த மகா­தே­வன் ரூபன் என்ற இளை­ஞனை நேற்­று­முன்­தி­னம் வெள்­ளிக்­கி­ழமை கைது செய்­த­னர்.

அவ­ரைக் கைது செய்­வ­தற்­குப் பொலி­ஸார் வீட்­டுக்­குச் சென்ற போது, வீட்டு லெவல் சீற்­றுக்­குள் மறைந்து இருந்­துள்­ளார்.

அதன் பின்­னர் ஏழா­லை­யைச் சேர்ந்த இரா­ஜ­கோ­பால் கிருஷ்ணகு­மாரை வீட்­டில் வைத்­துக் கைது செய்­த­னர்.

இவர்­க­ளி­டம் மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­க­ளின்­போது நகை­கள் மற்­றும் பணத்­தைக் கொள்­ளை­ய­டித்து நவா­லி­யில் பெண் ஒரு­வ­ரி­டம் வழங்­கி­ய­தா­கத் தெரி­வித்­துள்­ள­னர்.

மேலும் சிறு­மியை வன்­கொ­டு­மைக்கு உட்­ப­டுத்­தி­யமை தொடர்­பில் இவர்­கள் இரு­வ­ரி­ட­மும் தமிழ்ப் பொலி­ஸார் விசா­ரணை மேற்­கொண்­டுள்­ள­னர். இதன்­போது இரு­வ­ரும் ஒரு­வர் மீது ஒரு­வர் குற்­றம் சுமத்­தி­யுள்­ள­னர்.

மல்­லா­கம் பதில் நீதி­வான் முன்­னி­லை­யில் நேற்­று­முன்­தி­னம் வெள்­ளிக்­கி­ழமை சந்­தே­க­ந­பர்­கள் முற்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

அவர்­களை இரண்டு நாட் ­கள் தடுப்­புக் காவ­லில் வைத்து விசா­ரிக்க நீதி­வான் அனு­மதி வழங்­கி­யுள்­ளார்.