பேருந்தில் இளம்பெண்ணிடம் கீழ்த்தரமான நடந்து கொண்ட நபர் தொடர்பில் வெளியான தகவல்

Report Print Dias Dias in இலங்கை

பேருந்தில் பயணம் மேற்கொள்ளும் பெரும்பாலான பெண்கள் ஆண்களின் தொல்லைக்கு முகங்கொடுத்தே வீடு திரும்புகின்றனர்

அந்த வகையில் தனியார் பேருந்தில் பயணித்த ஒரு ஆணின் கேவலமான நடத்தைக் குறித்து யுவதி ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

குறித்த யுவதி தெரிவித்ததாவது,

பேருந்தில் பயணிக்கும் போது ஆண்கள் பெண்களை உரசிக்கொண்டு செல்வதுண்டு. இடப்பற்றாக்குறை என நினைத்து பெண்ணும் அமைதியாய் நின்றுக்கொண்டிருப்பாள்.

ஆனால், அந்த ஆணுக்கு இடப்பற்றாக்குறை பிரச்சினையல்ல. பெண்கள் மீது ஏற்படும் காம இச்சையே அவரை அப்படி செய்யதூண்டுகிறது.

அது மாத்திரமின்றி பேருந்தில் அமர்ந்துக்கொண்டிருக்கும் போது நித்திரை கொள்வதைப் போன்று பெண்கள் மீது சாய முற்படுவார்கள். அதுவும் ஆண்களின் போலி நடவடிக்கைகளில் ஒன்றே ஆகும்.

அவர்கள் உண்மையில் நித்திரை கொள்வதில்லை. நித்திரை கொள்வது போன்று பெண்களின் அந்தரங்க உறுப்புக்களை தொடுவதே அவர்களின் நோக்கமாகும்.

சில ஆண்கள் இரக்கப்பட்டு தங்கள் அருகில் அமருமாறு கூறுவார்கள். அவர்களுக்கும் அதே காம இச்சையை நிறைவேற்றும் நோக்கம் என்பதனை பெண்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

இது போன்ற சம்பவம் எனது (மல்கி ஓபாத்த) வாழ்க்கையிலும் இடம்பெற்றது. நான் வெள்ளவத்தையிலிருந்து கொழும்பிற்கு தொழிலுக்கு செல்லும் யுவதியாவேன். இதற்கு முன்னர் நான் வத்தளையிலிருந்து கொழும்பிற்கு தொழிலுக்கு சென்றேன்.

அவ்வாறு ஒரு நாள் நான் பேருந்தில் ஏறிய பின்னர் யன்னல் ஓரமாக அமர்ந்திருந்தேன்.

அந்த தருணம் எனக்கு அருகில் ஒருவர் அமர்ந்திருந்தார். சிறிது நேரம் சென்றதும் அவர் தன்னுடைய உடையை அகற்றி விட்டு அரைநிர்வாணமாக காணப்பட்டார்.

நான் அதிகம் கோபப்பட்டேன். என்னால் சத்தமிடவும் முடியவில்லை காரணம் தன்னால் தொடர்ந்து பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது.

நான் அமைதியாக வீடு திரும்பினேன். எனது அம்மாவிடம் தெரிவித்தேன். எனது நண்பிகளிடமும் தெரிவித்தேன்.. அவர்களும் அதிகமாக கோபப்பட்டனர்.

அவர்கள் இந்த சம்பவத்தினை ஊடகங்களுக்கு வெளிக்கொணருமான கேட்டுக்கொண்டனர்.

இதற்கமையவே நான் இதனை முதலில் என்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றி பின்னர் ஊடகங்களுக்கு அறிவித்தேன்.

எனினும், தற்பொழுது நான் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எந்த ஒரு ஆணுக்கும் அச்சம் கொள்வதில்லை. பெண்களிடம் முறையற்ற விதத்தில் பழக முயற்சிப்பவர்களை அந்த இடத்திலேயே தண்டித்து தண்டனையும் வழங்கி காணொளியாகவும் அவர்களை அடையாளம் காண்பித்து வருகின்றேன்.

இதேவேளை , இதுபோன்று பேருந்துகள் அல்லது வேறு இடங்களில் பெண்களிடம் முறையற்ற விதத்தில் நடந்து கொள்ளும் நபர்கள் தொடர்பில் 119 அல்லது 1938 என்ற அவசர தொலைப்பேசி இலக்கத்துக்கு அழைத்து அறிவிக்குமாறு அவர் பொதுமக்களிடம் குறித்த யுவதி கோரியுள்ளார்.

Latest Offers

loading...