யாழ்ப்பாண குடும்பங்களிற்கு மீண்டும் நெருக்கடி

Report Print Dias Dias in இலங்கை

யாழில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் விபரங்களை கோப்பாய் பொலிஸார் சேகரித்து வருகின்றனர் என தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

அத்தோடு, தற்பொழுது அவசரகால சட்டம் நடைமுறையில் இல்லாத நிலையில், பொலிஸார் ஏன் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர் என மக்களுக்கு வடக்கு மாகாண பொலிஸ் உயர் அதிகாரி தெளிவுபடுத்த வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த காலத்தில் வெள்ளவத்தை பகுதிகயில் உள்ள வீடுகளில் உள்ளோரின் தகவல்களை பொலிஸார் சேகரித்த போது அதற்கு அமைச்சர் மனோகணேசன் எதிர்ப்பு தெரிவித்து, பொலிஸார் தகவல்களை சேகரிப்பதை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து அந் நடவடிக்கை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது கோப்பாய் பொலிஸாரினால் தகவல்கள் கோரப்பட்டு வருகின்றன. தகவல்களை கோருவதற்கான காரணங்களை பொலிஸ் உயர் அதிகாரிகள் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

அதனூடாகவே மக்கள் மத்தியில் தற்போதுள்ள அச்ச நிலைமையை போக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...