பிரிகேடியர் பிரியங்க தொடர்பில் லண்டன் நீதிமன்றின் அறிவிப்பு

Report Print Dias Dias in இலங்கை

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ மீது வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றில் புலம்பெயர் அமைப்பொன்று தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

கொலை அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டில் பிரியங்க பெர்னாண்டோவிற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவை மீளப்பெற கூடாது என தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் போதே நீதிமன்றத்திற்கு வெளியே புலம்பெயர் தமிழர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா வாழ் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் அரசியல் குறுக்கீடு மற்றும் அழுத்தம் காரணமாக வெஸ்ட்மின்ஸ்டர் நீதவான் நீதிமன்றம் திரும்பப் பெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.