யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற பலரை இலக்கு வைக்கும் காவல்துறை

Report Print Dias Dias in இலங்கை

வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற வாள்வெட்டுக் கும்பலை நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ

யாழ்ப்பாணத்தில் கடந்த காலத்தில் வாள்வெட்டு சம்பவங்களில் ஈடுபட்டுவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்களை மீண்டும் நாட்டிற்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவ்வாறான சந்தேகநபர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு அந்தந்த நாட்டு அசாங்கத்திடம் கோரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் அலுவலகத்தில் நேற்று சனிக் கிழமை ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது, வாள்வெட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் கடந்த காலத்தில் நடைபெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தலைமறை வாகியுள்ளனர். சிலர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறுவதோடு, வெளி நாடுகளுக்குத் தப்பியவர் களை நாட்டுக்குக் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Latest Offers