யாழில் உள்ள மகிந்தவின் மாளிகையில் கை வைத்தார் மைத்திரி

Report Print Dias Dias in இலங்கை

தற்போது கடற்படையினர் வசமுள்ள மகிந்த ராஜ­பக்ச ஜனாதிபதியாக இருந்தபேது காங்­கே­சன்­து­றை­யில், கீரி­ம­லைக்கு அண்­மை­யாக 3.5 பில்­லி­யன் ரூபா செல­வில் அமைக்கப்பட்ட ஆடம்­பர மாளி­கையை சுற்றுலா அதிகார சபையினரிடம் கையளிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் படையினர் வசமுள்ள நிலங்கள் தொடர்பில் நேற்று முன்தினம் ஜனாதிபதி தலமையில் கொழும்பில் ஓர் விசேட சந்திப்பு இடம்பெற்றது.

இதில் மாவட்டச் செயலாளர் மற்றும் காணி உத்தியோகத்தர்கள் , சுற்றுலா அதிகார சபையினர் , ஜனாதிபதி செயலக அதிகாரிகள் , படை அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

குறித்த கலந்துரையாடலில் தற்போதும் படையினர் வசமுள்ள நிலங்களில் விரைவில் விடுவிக்கப்படக்கூடிய நிலங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இதில் இராணுவத்தினரிடம் உள்ள நிலங்களில் வலி வடக்கின் குரும்பசிட்டி மற்றும் பலாலி வீதிக்கு கிழக்குத் திசைகள் தொடர்பில் ஆராயப்பட்டதோடு தெல்லிப்பளை அச்சுவேலி வீதி விடுவிப்பின் சாத்தியங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு இவை தொடர்பில் இராணுவத்தினருக்கு அறிவுறுத்தல் வழங்குவதாக முடிவெடுக்கப்பட்டது.

இதேநேரம் கடற்படையினர் வசமுள்ள கீரிமலைப் பிரதேசம் தொடர்பில் ஆரயப்பட்டவேளையில் அங்கே அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட பிரதேசத்தினை முழுமையாக விடுவித்து அதில் ஜனாதிபதி மாளிகையினை மட்டும் சுற்றுலா அதிகார சபையினரிடம் கையளிப்பதற்கும் எஞ்சிய நிலத்தினை நிலத்தின் உரிமைநாளர்களிடம் கையளிக்க முடியும். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 100 ஏக்கர் விஸ்திரனம் கொண்ட இந்த மாளிகையினை வடக்கு மாகாண சபையிடம் கையளிக்க வேண்டும் என வடக்கு மாகாண சபை ஓர் தீர்மானம் நிறைவேற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி யாழ்ப்பாணம் வந்த போது அப்போதைய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சகிதம் குறித்த ஜனாதிபதி மாளிகையினைப் பார்வையிட்டதோடு இந்த மாளிகையினை வடக்கு மாகாண சபையை பொறுப்பேற்குமாறு கூறியிருந்தபோதும் அது தொடர்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

Latest Offers