மோசமான நடவடிக்கையால் சிங்கப்பூரில் வசமாக சிக்கிக் கொண்ட பிரபல இளம் நடிகை

Report Print Steephen Steephen in இலங்கை

இலங்கையின் பிரபல நடிகை ஒருவர், சிங்கப்பூரில் உள்ள ஆடம்பர வர்த்தக நிலையம் ஒன்றில் சில அழகு சாதன பொருட்களை திருடிய நிலையில், அந்த வர்த்தக நிலையத்தின் ஊழியர்களால் தடுத்து வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த நடிகை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படும் முன்னர், அவருடன் சிங்கப்பூர் சென்றிருந்த இலங்கையை சேர்ந்த செல்வந்த வர்த்தகர், நடிகை எடுத்த பொருட்களுக்கான பணத்தை செலுத்தி, அவரை விடுவித்துள்ளார்.

இந்த இளம் நடிகை அண்மை காலமாக இலங்கையின் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் எனவும், அவர் நடித்துள்ள தொலைக்காட்சி தொடர்கள் தினமும் ஒளிப்பரப்பாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நடிகை செல்வந்த வர்த்தகருடன் தனிப்பட்ட விஜயமாக சிங்கப்பூர் சென்றுள்ளதாக தெரியவருகிறது.