உயர்தர மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

Report Print Dias Dias in இலங்கை

வன் ஏ.பீ வகை அனைத்து பாடசாலைகளினதும் உயர்தர மாணவர்களுக்கு டெப் கணணிகளை வழங்குவதற்கு இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

மேலும் , இதற்கு முன்னுரிமை வழங்கி நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ள நிதிஅமைச்சு உடன்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வன் ஏ.பீ வகை பாடசாலைகளின் உயர்தர மாணவர்களை இலக்காக கொண்டு இதன் ஒழுங்குமுறை திட்டம் செயற்படுத்தப்படுகிறது.

இதன் முன்னேற்றம் மற்றும் மற்றைய விடயங்களை கருத்திற் கொண்டு மூன்று மாதங்களில் நாட்டின் ஏனைய உயர்தர மாணவர்களை இலக்காக கொண்டு இதனை செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Latest Offers