சூட்டு காயங்­க­ளுக்கு இலக்­கான இரா­ணு­வ சிப்­பாய் யாழ் வைத்தியசாலையில்

Report Print Dias Dias in இலங்கை

கட்­டுத் துவக்­கில் அகப்பட்டு காயங்­க­ளுக்கு இலக்­கான நிலை­யில் இரா­ணு­வ சிப்­பாய் ஒரு­வர், யாழ்ப்­பா­ணம் போதனா வைத்தியசாலை­யில் நேற்று இரவு சேர்க்­கப்­பட்­டுள்­ளார்.

இது தொடர்­பில் கிளிநொச்சி பூந­க­ரிப் பொலி­ஸார் தெரி­வித்­த­தா­வது...

பூந­கரி இரா­ணுவ முகா­மில் கட­மை­யாற்­றும் இரா­ணு­வச் சிப்­பாய் ஒரு­வர் நேற்று மாலை காட்­டுக்­குச் சென்­றுள்­ள போது அங்கே பொருத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த கட்­டுத் துவக்­கில் அகப்­பட்­டுள்­ளார்.

இதன் கார­ண­மாக இரா­ணு­வச் சிப்­பா­யின் ஒரு காலில் குண்டு துளைத்­துள்­ளது. படு­கா­ய­ம­டைந்த இரா­ணு­வச் சிப்­பாய் கிளி­நொச்சி மாவட்ட வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்டு மேல­திக சிகிச்­சைக்­காக யாழ்ப்­பா­ணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்­றப்­பட்­டுள்­ளதாக தெரிவித்துள்ளனர்.