போராட்ட வரலாற்றில் மூன்று பிள்ளைகளை தியாகம் செய்த தந்தை மரணமடைந்தார்

Report Print Dias Dias in இலங்கை

யாழ். வேலணை, கிழக்கு வங்களாவடியை (சாட்டி வீதி) சேர்ந்த மூன்று மாவீரர்களின் தந்தையான சின்னத்துரை சந்திரசேகரம் இன்று உயிரிழந்துள்ளார்.

தாயக விடுதலைப் போராட்டத்தின்போது இரு புதல்விகளை மாவீரராகவும், போராட்டத்தின் பணி நிமித்தம் சென்றவேளை காணாமல் போன மகனுமாக தாயக போராட்டத்தில் தனது மூன்று பிள்ளைகளை இவர் தியாகம் செய்துள்ளார்.

தங்கள் பிள்ளைகளை மட்டுமல்லாமல் அனைத்து போராளிகளையும் தங்கள் அன்பினால் அரவணைத்து காத்த மாவீரர்களின் பெற்றோர்கள் இன்று தாயக பிரதேசத்தில் பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், தாய்நாட்டின் விடிவுக்காக தங்கள் இன்னுயிரை உவந்தளித்த இவரைப்போன்ற மாவீரர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட அவர்களின் உறவுகள் அனைவரும் மரியாதைக்குரியவர்களே.

Latest Offers