பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை

Report Print Thayalan Thayalan in இலங்கை

இந்தியா எதிராக நடத்தப்படும் தாக்குதலை தடுக்கும் முன்னெச்சரிக்கை ஏற்பாடாக பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இந்திய விமானப்படை ஒத்திகைப் பயிற்சியை நடத்தியுள்ளது.

ஜம்மு, பஞ்சாபின் எல்லைப் பகுதிகளில் இந்திய விமானப்படையின் தயார்நிலை ஒத்திகைப் பயிற்சி இடம்பெற்றுள்ளது.

குறித்த பயிற்சியில் இந்திய போர் விமானங்கள் அதிவேகத்தில் பறந்து பயிற்சியில் ஈடுபட்டதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் எந்த நேரத்திலும் இந்தியாவுக்கு எதிராக தாக்குதலை நடத்துவதற்கு சந்தர்ப்பம் உள்ளதாக பரவலாக பேசப்படுகின்றமையால் அதனை எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த ஒத்திகைப் பயிற்சி நடத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

புல்வாமா தீவிரவாதத் தாக்குதலுக்கு பின்னர் இந்தியாவில் பாதுகாப்பு செயற்பாடுகள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers