சற்றுநேரத்தில் க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்!! 9413 பேர் வரலாற்றுச் சாதனை

Report Print Dias Dias in இலங்கை

இன்னும் சற்று நேரத்தில் க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சை எழுதிய பரீட்சாட்திகளின் பெறுபேறுகள் வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பரீட்சை பெறுபேறுகள் இன்று இரவு 8.30 முதல் 9.30 மணிக்குள் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

குறித்த பரீட்சைப் பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியுமென பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதே வேளை இம்முறை பரீட்சை எழுதிய பரீட்சாத்திகளில் 9413 பேர் 9 ஏ சித்திகளை பெற்றுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த சித்திகள் இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய சாதனை என தெரிவிக்கப்படுகின்றது.