வடக்கு கிழக்கில் கல்வி உயர்சியாக இருந்தது இன்று வீழ்ச்சிக்கு காரணம் என்ன.?

Report Print Thayalan Thayalan in இலங்கை

கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் வடக்கு கிழக்கு தாயகத்தில் இருந்து பரீட்சைக்கு தோற்றியவர்களில் 70 வீதத்திற்கு குறைவானவர்களே க.பொ.த.உயர்தரத்திற்கு தெரிவாகியிருக்கும் துர்பாக்கிய நிலை உருவாகி இருப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

போர்க்காலத்திலும் வடக்கு கிழக்கு தாயகம் கல்வியில் இலங்கையின் ஏனைய மாவட்டங்களை விட அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

திட்டமிட்ட வகையையில் மாணவர்கள் மீது திணிக்கப்படும் போதைப்பொருள் போன்ற தேவையற்ற விடயங்களே இந்த வீழ்ச்சிக்கு காரணமாக இருக்ககூடும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதைத்தான் அன்றே தலைவர் இவ்வாறு கூறினார்.

”எமது இனத்தின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் கல்வி ஆதாரமானது,எமது சமூகத்தின் முன்னேற்றத்துக்கும் அடித்தளமானது.நீண்ட காலமாகவே,எமது கல்வி வாழ்வைச் சிதைத்துவிட எதிரியானவன் முனைந்து வருகிறான் இதனால்தமிழரின் கல்வி பாரதூரமான அனவிற்குப் பாதிக்கப்பட்டிருக்கிறது”

தேசிய தலைவர்-பிரபாகரன்.

குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணத்தில் எந்த ஒரு மாவட்டமும் க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவில் உயர்சியடையவில்லை பின்னடைவை சந்தித்துள்ளது என்ற விடயம் ஆராயப்பட்டு அடுத்த கட்ட கல்வி வளர்ச்சிக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

வெறுமனமே சில பாடசாலை மாணவர்கள் 9,A எடுத்து விட்டார்கள் என்று நாம் திருப்திப்பட முடியாது எமது தமிழ் மாணவர்கள் கல்விக்கு பின்னடைவு என்ன தடைகள் என்ன என்பதை இங்குள்ள புத்திஜீவிகள் அரசியல் வாதிகள் சமூக ஆர்வலர்கள் இளைஞர்கள் கல்வித்திணைக்கள அதிகாரிகள் எல்லோரும் சிந்திக்க வேண்டும்

திட்டமிட்ட போதை பொருள் பாவனை மதுபானம் ஒழுக்க சீர்கேடுகள் மாணவர்கள் மத்தியில் இல்லாவிட்டாலும் அந்த மாணவர் சார்ந்த சமூகத்தில் சகோதரர்கள் பெற்றோர்கள் மத்தியில் தீய பழக்கம் இருப்பின் அது மாணவர்களின் கல்வியிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

சமூகவலைத்தளப்பாவனைகள் தொலைபேசிபாவனைகள் என்பனவும் நல்ல விடயங்களை விட்டு தீயவரழிகளுக்கும் மாணவர்களை இட்டுச்செல்லும்.

எனவே போர் வட்டுக்களை சுமந்த எமது வடக்கு கிழக்கு மாணவர்கள் போராட்ட காலத்திலும் கல்வியில் சாதனை படைத்தவர்கள் அன்று ஒழுக்கம் தன்னடக்கம் தியாக சிந்தனை மாணவர்கள் மத்தியில் இருந்தது அது இன்று முள்ளிவாய்கால் மௌனத்துடன் எல்லாமே மௌனித்து விட்டது என்பதே உண்மை.

(மாகாண ரீதியாக Provinces in Order)

1. Southern 78.75%

2. Western. 74.87%

3. North Central 74.83 %

4. North West 73.84%

5. Sabragamuwa 73.59%

6. CENTRAL 68.45%

7. UVA 68.33%

8. Northern 63.86%

9. Eastern 59.69%

(கடைசி இரண்டு இடமும் நமது மாகாணங்கள்)

-பா.அரியநேத்திரன்