இலங்கையில் இன்றும் நான்கு மாடி வர்த்தக கட்டிடம் ஒன்றில் பாரிய தீ

Report Print Thayalan Thayalan in இலங்கை

கண்டி, அலிமுடுக்குவ பகுதியில் அமைந்துள்ள வர்த்தக கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சற்று முன்னர் ஏற்பட்ட தீ விபத்தினால் இரு மாடிகள் எரிந்து நாசமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நான்கு மாடிக் கட்டிடம் ஒன்றிலேயே இத்தீவிபத்து ஏற்பட்டுள்ள அதேவேளை தீ பரவியதற்கான காரணம் தொடர்பாக இது வரை உறுதிப்படுத்தப்பட்ட தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.