கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலைய ஊழியர் தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்

Report Print Dias Dias in இலங்கை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று காலை நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தனது காலுறைகளை பயன்படுத்தி தங்க கட்டிகளை தனித்தனியாக பொதி செய்து விமான நிலையத்தில் இருந்து வெளியே கொண்டுவர முற்பட்டுள்ளார்.

இதன்போதே சுங்க அதிகாரிகள் விமான நிலையத்தில் பணிபுரியும் அந்த சந்தேகநபரை 40 தங்க கட்டிகளுடன் கைது செய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட தங்க கட்டிகளின் பெறுமதி மூன்று கோடியே இருபது இலட்சம் ரூபாவென தெரிய வருவதுடன் வத்தளையை சேர்ந்த 23 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.